Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Elakkiya STamil tutor
No reviews yet
நான் தமிழில் எவற்றை எல்லாம் தெரிந்து கொண்டேனோ அவற்றை முழுமையாக உங்களுக்கு புரிய வைக்கும் திறமை எனக்கு இருப்பதாக நம்புகிறேன். தமிழை கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களை வழிநடத்த ஓர் ஆசிரியராக நான் தயாராக இருக்கின்றேன். பழமை வாய்ந்த மொழியை பாடத்திற்காக மட்டும் அல்லாமல் அதன் சிறப்பை உணர்த்தும் வகையில் கற்பிக்க விரும்புகிறேன். குறுகிய காலத்தில் உங்களை தேர்விற்கு தயார் படுத்துவது மட்டும் அல்லாமல் தமிழில் சரளமாக பேச, எழுத, வாசிக்க வைக்க என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். தமிழ் மட்டும் அன்றி வரலாறு,புவியியல் மற்றும் நிர்வாகம் போன்ற பாடங்களையும் புரியும்படி கற்றுத்தரும் ஆற்றல் உள்ளது என்று நம்புகிறேன்.காலத்தை விரயம் செய்யாமல் விரைந்து வாருங்கள் கற்றல் பயணத்தை தொடங்கலாம். விளக்கிற்கு தூண்டுகோல் போல் உங்களை வழிநடத்த விழைகிறேன். ஆர்வம் உள்ள மாணவர்கள் தெரிவிக்கவும். நன்றிகள் பல.
Subjects
Tamil as a second language Beginner-Expert
History & Government Beginner-Expert
Experience
No experience mentioned.
Education
MSc (May, 2007–May, 2012) from Bharadhiyar university, coimbatore