Senthamilkothai To teach tamil clear and easily
No reviews yet

எளிமை இனிமை
தமிழ் என்றாலே கடினம் என்றாகிவிட்ட இன்றைய மாணவர்க்களின் உளவியல் சூழலையே மாற்றி, தமிழ்ப்படித்தல் எவ்வளவு எளிமை தெரியுமா என்று உணரவைக்கும் பொருட்டு நடத்துவேன்.
கடமைக்குப் படிக்காமல், உள்ளார்ந்த வேட்கையோடு அவர்களைப் படிக்க வைத்தல்.
மாணவர்களுக்கு என்ன மாதிரியான கடினமான கேள்விகள் தேர்வுகளில் வந்தாலும், அதை தைரியமாக எதிர்க்கொண்டு எழுத வைப்பேன். தோல்வி என்ற ஒன்றையே மறந்து விடும் அளவிற்கு அவர்களைத் தயார்படுத்துவேன்.
தமிழில் படிப்பதையும் எழுதுவதையும் சாதாரண விசயம்தான் என்று அவர்களின் பயத்தைப் போக்கிவிடுவேன்.எவ்வளவு கடினமான பாடமானாலும் அதனை எளிமையானஎடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கி புரிய வைப்பேன்.

சான்று :
அகம் புறம் என்று கூறினால், இக்காலத்தில் உள்ள எந்த மாணவருக்கும் எளிமையாகப் புரியாது. அவர்களிடம் அவர்களுடைய பையைக் காண்பித்து உள்ளே உள்ளது அகம், வெளியே உள்ளது புறம் -  உள்ளிருப்பது - வீடு - அகத்தில் உன்னுள் இருப்பது அகம் - காப்பகம் எனில் காக்கும் அகம் - ஆதவற்றோரைக் காக்கும் அகம்  - வீடு - என்று சொன்னால் அகம் என்ற சொல் விளங்கி விடும். 
இது போல அந்தச் சொல் தொடர்புடைய கருத்துகளைத் தொடர்ச்சியாகக் கூறி, விளங்க வைப்பேன். 
வீட்டுக்குள் வாழும் வாழ்க்கையை அந்தக் கால மக்கள் அக வாழ்க்கை என்று கூறுவர் என்று விளங்க வைப்பேன்.
மாணவர்களின் உள் வாங்கும் திறனுக்கேற்ப, அவர்களுடன் உரையாடி எந்தெந்த மாணவர்களுக்கு எப்படிச் சொன்னால் விளங்குமோ அப்படிச் சொல்வேன்.
அவர்களுக்குத் தேர்வு வைப்பேன். தேர்வு என்பது - அவர்கள் நான் சொல்லிக் கொடுப்பதை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அறியவே. அவர்களின் அறிவைச் சோதிப்பதற்கு அல்ல. 
அந்த விடைத்தாள்களை எனக்கு வைக்கப்பட்ட தேர்வாகக் கருதி - மனமார்ந்த ஈடுபாட்டோடு - இப்பணியில் ஈடுபடுவேன்.

Subjects

  • Tamil Grade 1-Doctorate/PhD


Experience

  • Assistant professor (Jun, 2016Jul, 2024) at 5 years of experience as a Assistant professor in Tamil
    To teach for under undergraduate students

Education

  • PhD (Jun, 2007Oct, 2012) from Mother Teresa Women's University, Kodaikanal, Tamilnaduscored Highly com

Fee details

    1,0002,000/hour (US$11.7923.58/hour)

    Hourly based .


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.