Libin kellis J TAMIL TEACHER
No reviews yet

நான் சென்னையில் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.எம் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறேன்.மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தையும் வெறும் வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த பாடத்தை உணர்ச்சி பூர்வமாகவோ அல்லது கதையாகவோ அல்லது பாடலாகவோப் பயிற்றுவிக்கும்போது எளிதில் மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்வர்.நானும் என் மாணவச் செல்வங்களுக்கு இதன்படியே பாடம் கற்பித்து வருகிறேன்.இலக்கணம் என்னும் கனி மாணவர்களுக்கு எட்டாக்கனியாத் தோன்றும்.அந்த எட்டாக்கனியை எட்டும் கனியாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ் ஆசிரியரின் தலையாயக் கடமையாகும்.நானும் எனது மாணவச் செல்வங்களுக்கு இலக்கணத்தை எட்டும் கனியாக மாற்ற முயற்சித்து வருகிறேன்.
மாணவர்களுக்கு தமிழ் படிப்பது பாகற்காய்ப்போல் அல்லாமல் சுவையானத் தேனாக மாற்றவேண்டியது ஆசிரியர் ஒவ்வொருவரின் கடமையாகும்.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பல மொழி கற்றறிந்த பாரதியார் அவர்களின் கூற்றை எடுத்துரைத்து மாணவச் செல்வங்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பை அறியச் செய்வோம்.கல்லாத ஒரு மன்னருக்கு அந்த நாட்டில் மட்டுமே சிறப்பு.கற்றவருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு இவ்வாறாக கல்வியின் சிறப்பை நம் முன்னோர்கள் போற்றியுள்ளனர்.அத்தகைய கல்வியின் சிறப்பை நாமும் உணர்ந்து சிறப்பாக கல்வி பயில வேண்டும்."தமிழுக்கு அமுதென்று பெயர் " என்று நம் முன்னோர்கள் தமிழைப் போற்றியுள்ளனர்.அத்தகைய அமுதை நாமும் அருந்தி வாழ்வில் உயர்வோம்.

Subjects

  • Tamil Grade 6-Grade 12


Experience

  • TAMIL TEACHER (Aug, 2023Present) at S.A.S TECHNO AND SPORTS SCHOOL

Education

  • B.E MECHANICAL ENGINEERING (Apr, 2012Apr, 2016) from Indra Ganesan college of engineering
  • Secondary (Jun, 2010Jun, 2012) from SIRUMALAR HIGHER SECONDARY SCHOOL
  • Secondary (Jun, 2006Jun, 2010) from ST.JOSEPH HR.SEC SCHOOL

Fee details

    2,8004,800/hour (US$33.0156.60/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.