Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
G.MathumithraTamil Teacher
No reviews yet
எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பணியை, என் வாழ்நாள் தொழிலாக தேர்வு செய்துள்ளேன். இதனை செவ்வனே செய்து பல மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் என பல்துறை சார்ந்த மாணவர்களை உருவாக்குவதே என் இலக்கு ஆகும். எனது தமிழ் ஆசானின் தமிழ் பற்றை கண்டே ஆசிரியர் பணியை ஆற்றும் ஆர்வம் கொண்டேன். அவரைப் போன்றே ஒரு சிறந்த ஆசிரியராக வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். வருங்கால சாதனையாளர்களை உருவாக்கும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒவ்வொரும் ஒரு நபரை முதன்மையானவராகக் கொண்டு அவரைப் போன்று வர வேண்டும் என்று ஆசை கொள்வர். அதுபோன்றே எனது ஆசானை முதன்மையானவராகக் கொண்டு எனது ஆசிரியர் பணியைச் செய்கிறேன். அவரது வழிகாட்டுதலின் படி அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டுள்ளேன். எனது இளங்கலை கல்வியியல் படிப்பினை முடித்த பின்னர் முதுகலை தமிழ் படிக்க உள்ளேன்.
என் பெயர் கோ.மதுமித்ரா. எனது குடும்பத்தில் நால்வர் உள்ளோம். என் தாய், தந்தை, தங்கையோடு திருப்பூரில் வசித்து வருகிறேன். எனது ஆரம்பக் கல்வியை நிர்மலா உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை பாண்டியன்நகர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை வீ.கே அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றேன். எனது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றேன். எனது ஆசிரியர்கள், தந்தை, தாயாருக்குப் பெருமை சேர்த்தேன். பின்னர் இளங்கலை கல்லூரிப் படிப்பினை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் பயின்றேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தேன். கல்லூரிப் படிப்பின் போது பல கருத்தரங்குகள், தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்று எனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். தற்போது இளங்கலை கல்வியியல் படிப்பினை கதிர் கல்வியியல் கல்லூரியின் தமிழ்த் துறையில் பயில்கின்றேன். எனது ஆசிரியர் கனவினை இளங்கலை கல்வியியல் படிப்பு பூர்த்தி செய்யும் என்ற நோக்கத்திலேயே இந்த படிப்பினையும், தமிழ்த்துறையினையும் தேர்வு செய்துள்ளேன். கடந்த ஓர் ஆண்டாக ஃபிரண்ட்லைன் மிலேனியம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினேன். எனது ஓராண்டு பணி அனுபவத்தின் வாயிலாக பல திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். அத்திறன்கள் எனது வருங்கால ஆசிரியர் பணியை திறம்பட செய்ய உதவியாக இருக்கும். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா நோய் பரவல் காரணமாக எனது பணியை தொடர இயலவில்லை. தற்போது எனது ஆசிரியர் பணியைத் தொடர உள்ளேன்.
Singapore Primary & Secondary Class Beginner-Expert
Experience
Tamil Teacher (Jun, 2021–Present) at Vidhyasagar International Public School
Tamil Teacher (Oct, 2020–May, 2021) at Vriksha international school
Tamil Teacher (Apr, 2020–Sep, 2020) at Ksc public school., anthiyur
Tamil Teacher (Jun, 2019–Mar, 2020) at Frontline Millennium school, CBSE
Education
MA (Tamil) (Jun, 2021–Jun, 2023) from Bharathiyar University Coimbatore
B.Ed (Tamil) (Jun, 2019–Jun, 2021) from TNTEU, Tamil nadu
BA (Tamil) (Jun, 2016–May, 2019) from Bharathiyar University Coimbatore
Fee details
₹300–800/hour
(US$3.51–9.36/hour)
Based on Students level & Curriculum
Courses offered
Spoken Tamil
US$400
Duration: 30 Hours
Delivery mode: Online
Group size: Individual
Instruction language:
English,
Tamil
Certificate provided:
No
Spoken Tamil through English courses are available in our academy. Individual and group classes are available. 3 to 5 students for group classes. Materials will be provided after completing each and every Classes. Doubt clarification session is there.